வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்கள் பல செய்தும் இராஜகோபுர கலசங்கள் மூலமும் பஞ்ச பூதங்களின் அனுக்கிரகத்தையும் ஒரு சேரப்பெற்ற அம்பாளும் - மூலவரும்> மூர்த்திகளும் இருக்க கூடிய கருவறை முழுவதும் தெய்வீக சக்தி நிரம்பப் பெற்றுள்ளது. கருவறை மண்டபத்தில் இருந்து வெளிவரும் தெய்வீக சக்தியானது> தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மீது படுவதால்> உடல் ஆரோக்கியம் மேம்படும். உள்ளமும் புத்துணர்வு பெறும். கோவிலுக்குச் சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை தரிசிப்பதால்> உணரக்கூடிய தெய்வீக காந்த அலைகளின் (ஏiடிசயவழைn) மூலம் தெய்வீக (அருள்) சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும். இதனை உணர்ந்த சான்றோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று! என நமக்கு வழிகாட்டி உள்ளனர்.


|| ஆக்கையாற் பயனென் - அரண் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையாற் பயனென் \\
- திருநாவுக்கரசர்
 

கடவுள் வழிபாட்டின் அவசியம்

உடம்பு நயப்படுவதற்கு உணவும்> மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும்> மனமும் ஆன்மாவின் கருவிகள்> உடம்பு தொழில் செய்வதற்கும்> மனம் ஆராய்வதற்கும் கருவியாய் உள்ளவை. உடம்பினும்> மனத்தினும் மேலானது ஆன்மா. இந்த ஆன்மாவை கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதல் மூலமே நயப்படுத்த முடியும். இறை வழிபாட்டில் அம்மனின் தரிசனம் மிக சிறப்புப்பெற்றது..