பரவை முத்துநாயகிஅம்மன் கோயில் அமைவிடம்
நாயகி என்ற சொல்லிற்கு எசமாட்டி> பார்வதி> பெருமையில் சிறந்தவள் மனைவி என்று பல்வேறு பொருள் உண்டு. அம்மன் என்றால் தாய் என்று இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி பொருள் தருகிறது. நாயகி எனும் தமிழ்ச் சொல்வழக்கன்று ஆனால் பல மக்களின் நாகரிகக் கலப்பினால் தமிழ் மாந்தருக்கு நாயகி என்று வடமொழியின் பெயரை வைத்து கொள்வது போல தமிழர் வணங்கும் தெய்வத்திற்கும் நாயகி என்ற பெயர் வந்தது எனத் தெரிகிறது. முத்துநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்த பரவை எனும் ஊர் மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பரவை ஊர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கொண்டது.
பரவை ஊர்ப்பெயர்
பரவை எனும் இவ்வூர் நிலப்பரப்பில் பரந்த தொலைவினைக் கொண்டு சமவெளியாக விளங்குகிறது. அச்சமவெளி நிலப்பரப்பில் மலை குன்று போன்றவை குறுக்கீடு இல்லாமல் பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த இடம் குறித்த பெயர் பரவை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என்பது தெளிவு. பரவை எனும் இந்த ஊர் நீர்நிலைகளில் ஏரி> குட்டையுடன் வேளாண்மைப் பயிரிட நிலப்பரப்பு நிறைந்த நிலமாகக் காட்சி அளிக்கிறது.
முத்துநாயகிஅம்மன் கட்டக்கோயில்
முத்துநாயகி அம்மனின் கோயில் வழிபாட்டிற்குத் தொடக்கத்தில் மேடை வடிவில் கோயில் என விளங்கியது. பின்னர் ஊர் மக்களால் கருவறையும்> முன்மண்டபமுடைய கட்டடம் கட்டப்பட்டது. இக்கோயில் கருவறையும்> முன்மண்டபமும் கருங்கற்களைக் கொண்டு சுதை மண்ணால் கட்டப்பட்டது. 1978-க்கு பிறகு மகா மண்டபம் கட்டப்பட்டது. 1985-ம் ஆண்டு திரு.சு.ளு.வீரண்ணன் அவர்கள் சார்பாக முன்மண்டபம் கட்டப்பட்டது.
இவ்வாறு இருந்த கட்டடக் கோயிலை சீர்திருத்தம் செய்து தற்போதைய திருப்பணிக்குழுத் தலைவர் ஆ.மனோகரன் அவர்கள் முயற்சியால் புதுப்பித்து 2005-ல் கட்டி குட முழுக்கு நிகழ்த்தப்பட்டது. தற்பொழுது கருவறை> முன்மண்டபம்> மகாமண்டபம்> வெளிமண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. இக்கோயில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்து உள்ளது.
தாலாட்டுப்பாட்டு ஒலியும்> அம்மிதட்டும் ஒலியும்> உரல் இடிக்கும் ஒலியும் அம்மனின் காதிற்குக் கேட்கக்கூடாது என்று தான் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது.