உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும், மனமும் ஆன்மாவின் கருவிகள், உடம்பு தொழில் செய்வதற்கும், மனம் ஆராய்வதற்கும் கருவியாய் உள்ளவை. உடம்பினும், மனத்தினும் மேலானது ஆன்மா. இந்த ஆன்மாவை கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதல் மூலமே நயப்படுத்த முடியும். இறை வழிபாட்டில் அம்மனின் தரிசனம் மிக சிறப்புப்பெற்றது.