இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி இருந்ததாக மாந்தர் வரலாறு உணர்த்துகின்றது. வரலாற்றில் மனிதனின் இருப்பிடம் தொடக்கத்தில் மலை, காடு, சமவெளி, ஆற்றோரம் என்ற நிலைகளில் ஒடுங்கி வாழ்ந்ததில் பனி, கடும்காற்று, மழை, வனவிலங்குகளின் இயக்கங்களினால் துயரநிலை அடைந்ததை அக்காலத்திற்குரிய வரலாற்று ஆவணங்கள் எனக் கொள்ளத்தகும் சான்றுகள் வழி உணரலாம். இவ்வகையில் காலத்தின் கழிவில் மாந்தர் இருப்பிடங்களாகிய மலைக்குகைகளில் தங்கி வாழ்தலும், மலைச்சரிவுகளில் இயற்கையின் அமைப்புகளிலோ, மாந்தனது முயற்சியாலோ வாழ்விடங்கள் என நான்கு பக்கங்களாலும் கற்கள் நாட்டப்பட்டு வாழ்விடமாக அமைந்தது. அந்த அமைப்பே பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் மாந்தனால் அமைக்கப்பட்டன என்பதற்குத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வரலாற்றுச்சான்றுகள் உரைத்து நிற்கின்றன.

ஆண் தெய்வ வழிபாடோ, பெண் தெய்வ வழிபாடோ தமிழ் மாந்தர் வாழ்வைக் குறித்த பொருண்மையிலேயே கோயில் கட்டட அமைப்பு பூஜை, விழா முதலியவை நடைபெற்றன. தமிழரின் உணர்வு அடிப்படையாகவும் தமிழரின் இயற்கை உணர்திறன் அடிப்படையால் வழிபாடுகளும், அவற்றிக்குரிய கட்டடக்கலை மரபுகளும் உருப்பெற்றன. இத்தகைய மரபைத் தமிழர்ப் பெருந்தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, எனக் கொண்டனர் என்பது தமிழர் வரலாறு. அவற்றின் உண்மை விளக்கத்திற்கேற்பவே பெருந்தெய்வக் கோயில், சிறு தெய்வக்கோயில் என்ற கட்டடக்கலை மரபு உருப்பெற்றது. தமிழகத்தின் கலை, மொழி சமய உணர்வுகளை வெளிப் படுத்தும் பண்பாட்டுக்கூடமாகத் திருக்கோயில்கள் விளங்கி வருகின்றன. ஷகோ| என்பதற்கு அரசன் என்பது பொருள். கோயில் என்பது அரசனது இல்லம் அல்லது அரண்மனை என்ற பொருளைத் தரும்.

முதலில் அரண்மனையைக் குறித்த இச்சொற்றொடர் பின்னர் உலகத்தார் அண்டத்திற்கே அரசன் எனக் கருதிய கடவுளின் ஆலயத்தைக் குறித்து வந்தது. ஷஷகோயில் என்பது அரண்மனை என்ற பொருளில் சிலப்பதிகார காலத்திலும் வழங்கியது. பதிற்றுப்பத்தின் இறுதிப்பதிகமும் பட்டத்தரசியைக் ஷகோயிலாள்| என்றே வழங்குகிறது. பரிபாடலின் இரண்டாவது செய்யுளில் வரும் கோயில் என்ற சொல்லுக்கு ஆலயம் என்று உரையாசிரியர் பொருள் கொண்டிருந்தாலும் அரண்மனை அதற்காக அமைவது வழக்கமாதலின் அங்கேயும் கோயில் என்பதற்கு அரண்மனை என்ற பொருள் கொள்வது பொருந்தும். ஆனால் விரைவில் கோயில் என்பது ஆலயத்திற்குப் பெயராக வழங்கி வந்தது.

தேவார காலத்திற்குள் பெருங்கோயில், இளங்கோயில் முதலிய கோயில் வகைகளாம். ஆலய வகைகளை குறிப்பனவாக வழங்கத் தொடங்கிவிட்டன.|| ஷஷகோயில்இல்லாஊரில்குடியிருக்கவேண்டாம்|| என்கிறது ஒளவையாரின் - மூதுரை. ஷஷபயிர்களையும் கால்நடைகளைக் காக்கவும் மக்களை நோய்களில் இருந்து மீட்கவும் சிறுதெய்வங்களுக்குக் கோயில் எழுப்பி மக்கள் வழிபடுகின்றனர்.

சிறுதெய்வத்திற்குக் கோயில் அமைத்து வழிபடும் மரபு பழமையுடையதாகவும் ஆண், பெண் போன்று செய்யப்படுபவை உலக உயிருக்கு அடிப்படையானவை என்பதன் சின்னமாக சிறுதெய்வ வழிபாட்டின் உண்மையாகும்||. ஆகவே தெய்வ வழிபாட்டில் சிறு தெய்வ வழிபாடு மாந்தர் வாழ்க்கை குறித்த அனைத்து கூறுகளையும் இயல்புகளையும் கொண்டது என்று உணரப்படுகிறது. இவ்வுண்மையில் தமிழக ஊரகப் பெண் தெய்வ வழிபாட்டு வரலாற்றில் பரவை முத்துநாயகிஅம்மன் திருக்கோயிலும் ஒன்றாகத் திகழ்கின்றது.