கோயில் ஆய்வுகளில் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய மாந்தர் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு அஞ்சி இயற்கையையே வழிபடத் தொடங்கினர். அச்ச உணர்வு மனிதனை வழிபடத் தூண்டின என்பார் சிக்மண்ட் பிராய்ட் சமயம் என்ற அமைப்பானது கடவுள் அல்லது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகும். உளவியல் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மனிதனைக் கடவுளிடம் நேர்முகப்படுத்தும் கருவியாக வழிபாடுகளும் விழாக்களும் நம்பிக்கைகளும் திகழ்கின்றன
வழிபாடு
வழிபடு என்ற வேர்ச் சொல்லினின்று வழிபாடு எனும் சொல் தோன்றியது. எனவே வழிபாடு எனும் சொல் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது. அதற்கு வழியிற் செல்லுகை. பின்பற்றுகை, வணக்கம், பூசனை எனப் பல்வேறு பொருள்கள் கொண்டுள்ளது. மேலும் வழிபாடு இறைவனுக்கும் மாந்தனுக்கும் தொடர்பை ஏற்படுத்துகின்றது. ஷஷமக்கள் கூட்டத்தினர் கருவளத்தையும், பயிர் வளத்தையும் ஒருங்கே பெறுவதற்காகவே மந்திரங்களைக் கையாண்டனர். அதற்குத்தர்க்க ரீதியான முடிவாக வழிபாடு தோன்றியிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பெண் தெய்வ வழிபாடு தமிழகத்தில் தொன்று தொட்டுத் தோன்றி வளர்ந்தது.
கன்னித்தெய்வ வழிபாடு ஊரகத் தெய்வ வழிபாட்டில் முதன்மையானதாக விளங்குகின்றது. வாழ்க்கை முறையில் வழிபட்ட தெய்வங்களில் பரவை முத்துநாயகிஅம்மன் கோயில் வழிபாடுகளும், பூஜைகளும் நிகழ்ந்து வருகின்றன.
மக்கள் மனத்தால் ஒற்றுமைப்பட்டால் திருவிழா முதலியன நிகழும். ஆனால் இன்று வைதீக நெறிகளுக்கு உட்பட்டு கோயில் அமைப்பு, தெய்வத்திருமேனி பூஜை விழா கொண்டாடினால் தான் அவ்வூரில் கோயிலுக்குப் பெருமையாகவும், தெய்வத்திற்கு மதிப்பும் என்று கருதி கோயிலில் பூஜை விழா நடத்தப்படுகிறது. பரவை முத்துநாயகிஅம்மன் கோயில் வழிபாடு
1. நாள் வழிபாடு
2. திங்கள் வழிபாடு (மாதம்)
3. வெள்ளுவா (முழு நிலா வழிபாடு)
4. சிறப்பு வழிபாடு
என நான்கு வகைகளில் நடைபெறுகின்றது.